பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருமுருகாற்றுப்படை விளக்கம் பழங்கால நூல்களில் இந்த மாமரத்தைப் பற்றின செய்தி ஒன்று காணப்படுகிறது. அசுரர்கள் எல்லாம் சேர்ந்து தங்களுக்குப் பலமாக ஒரு மாமரத்தை வைத்திருந்தார்கள் என்றும், தம்முடைய மந்திர சக்தியால் அதனேக் காப் பாற்றி வந்தார்கள் என்றும், அது குரனுக்கு உயிர்கிலேயாக இருந்தது என்றும், அதனே முருகப்பெருமான் வேலால் பிளந்தான் என்றும் அந்த வரலாறு சொல்கிறது. காவல் மரம் பழங்கால மன்னர்கள் தத்தமக்குரிய காவல் மரம் ஒன்றை வளர்த்து வந்தார்கள். அதைக் கண்ணினும் உயிரினும் சிறப்பாகக் கருதிப் பாதுகாத்து வந்தார்கள். பகைவர்கள் போரிடும்போது அந்த மன்னர்களின் காவல் மரத்தை வெட்டித் தங்கள் வெற்றியை கிலே நாட்டுவார்கள். அந்தக் காவல் மரத்தால் முரசு செய்வதும் உண்டு, சங்க காலத்து நூல்களில் காவல் மரங்களைப் பற்றிய செய்திகள் பல உள்ளன. சூரபன்மா என்ற அசுர மன்னனுக்குக் காவல் மரமாக மாமரம் இருந்தது. பகையரசனுடைய காவல் மரத்தைத் தடிவது போல முருகன் தன் பகை வகிைய சூரனது காவல் மரத்தைத் தடிந்து வெற்றியை கிலே காட்டினன் என்பது பழைய மரபுக்கு ஒத்த செய்தி எப்படியிருப்பினும் முருகப்பெருமான் மாமரத்தை வெட்டி வெற்றி பெற்றது பழமைக்கும் புதுமைக்கும் பொதுவான செய்தி. வேவினுடைய பெருமையைச் சொல் லும் வாயிலாகச் சூரனுடைய சங்காரத்தை இங்கே நக்கீரர் எடுத்தோதினர். ஆக, முருகப்பெருமானுடைய அங் கங்களைச் சொல்லி அவனுடைய திருக்கரத்திலுள்ள வேலாயுதத்தைப் பற்றியும் சொல்லிவிட்டார். . . .