பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் இனிமேல் புலவனே ஆற்றுப்படுத்தும் பகுதி வருகிறது. இதுவரைக்கும் முருகனப் பற்றிய செய்தியைப் பொது வாகச் சொன்னர். அத்தகைய முருகனிடத்தில் அன்பு பூண்டு, அவனுடைய திருவடியை அடைய வேண்டுமென்று விரும்பும் ஒரு புலவனேப் பார்த்து, முருகப்பெருமானுடைய திருவருள் பெற்ற மற்ருெரு புலவன், "இவ்வாறு சென்ருல் முருகப் பெருமானேக் கண்டு இன்புறலாம்' என்று சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. திருமுருகாற்றுப் படை. அதற்கு ஏற்றபடி இது வரைக்கும் முருகன் வருணித்த புலவர், இனி எதிர் கின்ற புலவனைப் பார்த்து அவன் புறப்பட்டதைப் பாராட்டி, ஆற்றுப்படுத்தத் தொடங்குகிருர், - - நல்ல பயணம் தேசு பொருந்திய திருவுருவம், அடைந்தாரைக் காக்கும் அரணமாகிய திருவடி, தீயவரை அழிக்கும் திருத்தோள். தேவ யானையாகிய கற்புடைத்தேவி அமர்ந்த பக்கம், கடம்ப மாலை அணிந்த திருமார்பு. காந்தளங்கண்ணியை அணிந்த திருமுடி, சூரனை அழித்த சுடர் வேல்-இவற்ருேடு விளங்குகிற செவ்வண்ணப் பெருமாளுகிய முருகனுடைய புகழ் சொல்லில் அடங்குமா? அறிந்துகொள்ளத்தான் முடியுமா? அவன் யாரும் அறிய முடியாத பெரும் புகழை உடையவன். * . . எய்யா கல்இசைச் செவ்வேற் சோய்.