பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - 149. மார்பைப் பிளந்து அவற்றை வாங்குபவை, உயர்ந்தவை ஆகிய தோள்கள். பொறி-கோடு, மொய்ம்பு-வலிமை. விடுபு-விட்டு. வசிந்து-பிளந்து.) 'வசித்து வாங்கு கிமிர்தோள்' என்பதற்கு வேறு ஒரு வகையிலும் பொருள் சொல்லலாம், வசி என்பது வசியத் .துக்கும் ஆகும், பிறருடைய உள்ளத்தைக் கவர்ந்து வாங்கி கிமிர்கின்ற தோள்' என்றும் கூறலாம். ஆடவர்களு டைய திருத்தோள்கள் வீரம் கிரம்பி மங்கையர் மனத்தைக் கவர்வன என்பர்கள். - , ~ '..................மங்கையர்கள் - தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்” என்பது களவெண்பா. “தம்முடைய வலியினலே பெரிய புகழ் சிறையச் சுடரை யுடைய படைக்கலங்களே எறிந்து பகைவர்மார்பைப்பிளந்து அவற்றை வாங்குதோள்' என்று உரையெழுதுவர் கச்சினர்க் கினியர்.'சுடரையுடைய படைக்கலங்களைச் சுடர் என்ருர்: அஃது ஆகுபெயர்’ என்று விளக்கம் கூறுவர். வேறு ஒரு பழைய உரையாசிரியர், மார்பிலே சீதேவியைக் கைக் கொண்ட வலியினையுடைய ஒளிவிட்டு வளவிய புகழ் சிறைந்து வளர்ந்து நீண்டு கிமிர்ந்த தோள்கள்' என்று எழுதுவார். பொறியென்பதற்குச் சீதேவியென்றும், வசிந்து என்பதற்கு வளர்ந்து என்றும் பொருள் கொண்டார் அவர். முருகன் அசுரர்களோடு போர் செய்யும் காலத்தில் பன்னிரண்டு திருக்கரங்களிலும் படைக்கலம் ஏந்தி அவர் கள் மார்பைப் பிளப்பதனல் இச்செயலே எல்லாத் தோள் களுக்கும் பொதுவாகச் சொன்னர் என்று கச்சினர்க்கினியர் கூறுவார்.