பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருமுருகாற்றுப்படை விளக்கம் ாச்சினர்க்கினியரே வேறு ஓர் உரையையும் அடிக்கடி குறிக்கிருர்: "இனி மொய்ம்பினை உடைத்தாய் ஒளிவிட்டு: நிறைந்து, வளையவேண்டும் இடம் வளைந்து நிமிர வேண்டும் இடம் கி.மிரும் தோள் என்றும் உரைப்பர்' என்று அவர் பிறர் உரையாக ஒன்றைக் காட்டுவார். தோள்கள் கழுத்துக் கருகில் வளைந்தும் ஒரத்தில் கிமிர்ந்தும் விளங்குவதைக் கொண்டு இவ்வுரை எழுந்ததென்று தோன்றுகிறது. ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசித்துவாங்கு நிமிர்தோள் என்று உரைத்த சிறப்பினல், முருகன் தோள்கள் வீரம் செறிந்தன. வீரச் செயலைப் புரிவன, ஒளிபடைத்தன, புகழ் கிரம்பியன, உள்ளத்தைக் கவர்வன, குவிந்து கிமிர்ந்தன என்ற உண்மைகள் புலனுகின்றன. அத்தகைய தோள் களுள் ஒவ்வொரு கையும் இன்ன இன்ன செயலைப் புரிகின் நது என்பதை இனிச் சொல்லப் போகிருர், தோளுக்கும். கைக்கும் உள்ள ஒற்றுமை கயம் கருதி, தோள்களுள் ஒரு கை இவ்வாறு செய்யும் என்று முறையே சொல்லப் புகுகிரு.ர். r - முன்னே சொன்ன ஆறுமுகங்களும் முறையே தத்தமக்கு உரிய செயலைச் செய்வதனல், அச்செயல்களுக்கு இயைய, வீரமும் பெருமையும் உடைய தோள்களில் ஒவ்வொரு கையும் இன்ன இன்ன செயலேப் புரிந்தருளும் என்று. முன்னே சொன்ன பகுதியோடு பொருளேத் தொடர்புபடுத் திக்கொள்ள வேண்டும். ஆங்கம், மூவிரு முகனும் முறைாவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் - செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசித்துவாங்கு கிமிர்தோள்