பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 151 என்று முகத்தையும் மார்பையும் தோள்களையும் தொடர்பு படுத்தி, அப்பால் தனித் தனிக் கைகளின் செயலே விளக்கு கிரு.ர். முனிவர் இடர் தீர்க்கும் கைகள் ஒரு முகம் உடையாருக்கு இரண்டு கைகள் இருக்கின் றன. நான்கு முகமுடைய பிரமனுக்கு எட்டுக்கைகள். சிவ பெருமானுக்கு ஐந்து திருமுகங்களும் பத்துக் கரங்களும் உண்டு. முருகன் ஆறுமுகம் உடையவன். தெய்வங்களில் அதிக மான முகமும் அதிகமான திருக்கரங்களும் உடைய பெரு மான் அவன். ஆறு முகங்களுக்கு ஏற்றபடி பன்னிரண்டு திருக்கரங்களோடு விளங்குகிருன். ஆறு முகங்களின் செயலைச் சொன்ன நக்கீரர், அவற்றிற்கு ஏற்ற செயல்களைப் புரிவனவாகக் கரங்களைச் சொல்கிருர், ஒரு செயலேப் புரியும் போது திருமுகம், அதன்பால் பார்வையை ஈடுபடுத்தியிருக் கும்; புன்முறுவல், வார்த்தைகள், அசைவு ஆகியவற்ருல் அந்தச் செய்கைக்கு ஆவன புரியும். ஆனலும் நேரடியாகச் செயல்களைச் செய்வன திருக்கரங்களே. கைகளே செயலுக்கு அடையாளம். கை என்பதற்கே செயல் என்ற பொருள் உண்டு. கெடுந்துாரம் கடக்க இயலாதவனேக் காலால் ஆகா தவன் என்பதில்லை; நெடுநேரம் கண்விழித்துப் படிக்க இயலாதவனேக் கண்ணுல் ஆகாதவன் என்று சொல்லும் வழக்கம் இல்லை. எல்லோரையும் கையால் ஆகாதவர் என்றே சொல்லுகிருேம். கை செயலுக்கு உரிய சிறந்த கருவி. தெலுங்கில் செயல் என்பதன் பகுதியாகிய செய் என்பதே கைக்கு ஒரு பெயராக வழங்குகிறது. அம்மொழி தமிழின் இனமொழி அல்லவா?