பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 199 செய்யும் பெரியவர்கள். ஆயினும் இப்போது ஏழை யரைப்போல முருகனிடம் தங்கள் வேண்டுகோளைக் கூறி இரந்து பெற வருகிருர்கள். முதலில் சிற்பவரை அடையாளம் தெரிகிறதா? நெடுந்துாரத்தில் வரும்போதே இன்னர் வருகிருர் என்று தெரியும்படி யாக ஓர் அடையாளம் இருக்கிறது. கருடக்கொடி பளபளக்கிறது. கருடனுடைய வீரம் பெரிது. பாம்பு என்ருல் படையும் நடுங்கும் என்பார்கள். அத்தகைய பாம்புக் கூட்டம் எவ்வளவு பெரிதானலும் அஞ்சி கடுங்கும்படி செய்கிறவன் கருடன். பாம்புகளைக் கொத்துவது கூட அவசியம் அன்று. தன் சிறகைப் படபட வென்று அவன் அடித்துக்கொண்டாலே போதும். காகங்கள் சுருண்டு விழும். பல கோடுகளையுடைய அந்தச் சிறகுகள் கருடனுக்கு அழகாகப் பொருக்தி யிருக்கின்றன. கொடிய காகங்களும் கருடனுக்கு அஞ்சி கடுங்கும். - நஞ்சுடைய காகத்துக்கு ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு இரண்டாக வாயில் நான்கு நச்சுப்பற்கள் உண்டு. அந்தப் பற்களோடு இணைந்து நஞ்சுள்ள பைகள் இருக் கின்றன. பாம்பு ஒருவரைக் கடிக்கும்போது பற்கள் அழுந்தும். நச்சுப்பையிலிருந்து நஞ்சு பல்லிலுள்ள துளையின் வழியே சென்று கடிக்கப்பட்டவன் உடம்பில் ஏறும். டாக்டர் துளையுள்ள ஊசி வழியே மருந்தை ஏற்றுவது போலப் பாம்பும் துளையுள்ள பல்லால் நஞ்சை ஏற்றுகிறது. நான்கு நச்சுப்பற்களுக்கும் காளி, காளாத்திரி, யமன், யமதூதி என்று பெயர். கஞ்சு ஒடுங்கி விற்கும் எயிற்றில் துளே இருக்கிறது. பாம்புகள் மூச்சு விட்டாலே துன்பம் உண்டாகும்; தீக் காற்று வீசும், அத்தகைய கொடிய கச்சரவங்களும்