பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 - திருமுருகாற்றுப்படை விளக்கம் கடுநடுங்கி விழும்படி சிறகை அடிக்கும் பறவை கருடன். அவனே உயர்ந்து தோன்றும் தம் கொடியிலே கொண்ட செல்வர் திருமால். வெற்றியும் மிடுக்கும் உடையவர்கள் கொடி கட்டிக் கொள்வார்கள். திருமாலின் சிறப்பும் பல படியாக இருந்தாலும் இங்கே அவருடைய கொடியை மட்டும் கூறி அவருடைய பெருமையைப் புலப்படுத்து கிருர் நக்கீரர். - கடுவோடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்அணி நீள்கொடிச் செல்வனும். (நஞ்சோடு உள்ளே அமைந்த துளையையுடை வெள்ளேயான பல்லேயுடையனவும், நெருப்பைப்போல மூச்சுவிடுவனவும், அச்சத்தை உண்டாக்குகின்ற கடுமை யான வலிமையை உடையனவுமாகிய பாம்புகள் அஞ்சி விழும்படி அடிக்கும். பல கோடுகளே உடைய வளைந்த சிறகுகளையுடைய பறவையாகிய கருடனே அணிந்த உயர்ந்த துவசத்தையுடைய திருமாலும். கடு-நஞ்சு. தூம்பு-துளை. வால் எயிறு-வெள்ளே யான பல். உயிர்க்கும்-மூச்சுவிடும். அஞ்சுவரு-அச்சம் உண்டாகின்ற. வரி-கோடு. கொடுஞ்சிறை-வளைந்த சிறகு,] அடுத்தபடி சிவபெருமான் வருகிருர். அவரையும் அவருடைய துவசத்தாலே இனம் கண்டு கொள்ளலாம். அவருடைய வாகனமும் கொடியுமாக இருப்பது இடபம். தர்மமே இடபமாக இருப்பதல்ை அது வெள்ளே வெளே ரென்று மாசு மறுவின்றி விளங்குகிறது.