பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 205. தொழில்கள் கடக்க வேண்டும், படைப்புத் தொழில் கின்றதும் மற்ற இருவருக்கும் வேலே இல்லே. பழையபடி எல்லாம் நடைபெறவேண்டுமானல் பிரமன் விடுதலைபெற வேண்டும். அப்போதுதான் மூன்று மூர்த்திகளும் தத்தம் தொழிலை முறையாகச் செய்யமுடியும். இதனை உணர்ந்து கான்முகன் விடுதலையைக் காரண மாகக் கொண்டு இவர்கள் வருகிருர்கள். பழையபடி மூன்று மூர்த்திகளும் தலைவராக இருந்து மூன்று தொழில்களையும் இயற்றி உலகத்தை இயங்கச் செய்யவேண்டும் என்பதே இவர்கள் விருப்பம். நான்முகன் தாமரையில் தோன்றியவன். நீண்ட ஆபுளே உடையவன். அவன் இன்று சிறைப்பட்டிருப்பதற்குக் காரணம், முருகனே அவமதித்தது. கைலேக்கு வந்த நான் முகன் முருகனேக் கண்டும் வணங்கவில்லை. அவனுடைய அகந்தையை அறிந்து அதனைப் போக்க எண்ணிய முருகன் அவனை அழைத்தான். யார் என்று கேட்டான். பிரமன் என்ருன். என்ன தொழில் என்று கேட்கப் படைக்கும் தொழில் என்ருன். என்ன வரும் என்ற போது வேதம் வரும் என்ருன். "எங்கே, சொல்' என்று முருகன் பணிக்க, "ஓம்" என்று தொடங்கினன். அந்த அளவிலே கிறுத்தி, 'அதற்குப் பொருள் சொல்' என்று சொல்லப் பிரமன் சொல்லத் தெரியாமல் மயங்கினன். அப்போது முருகன் அவன் தலையிற் குட்டிச் சிறையில் இருத்திவிட்டுத் தானே படைக்கும் தொழிலே மேற்கொண்டான் என்பது கந்த புராணத்திற் கண்ட வரலாறு. பழங்காலத்தில் வேறு ஒரு வகையில் நான்முகன் பதவியை இழந்த வரலாறு வழங்கிவந்தது. அதைத் திரு முருகாற்றுப்படைக்கு உரை எழுதிய கச்சிர்ைக்கினியர்