பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் 221 அறு தொழிலாளர் அவர்கள் ஆறு தொழில்களேச் செய்பவர்கள். "ஷட்கர்ம பிரதர்கள்' என்று சொல்வார்கள். 'அறு. தொழிலோர் நூல்' என்று திருவள்ளுவரும் கூறினர். ஆறுமுகநாதனுடைய அடியார்களைப் பற்றிக் கூற வருவ தல்ை எடுத்தவுடன் ஆறு என்னும் எண்ணேப் பெற்ற தொழில்கள் கினைவுக்கு வருகின்றன. - இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது. (ஆறு என்று தமக்கு அமைந்த இலக்கணத்தினின்றும் பிழையாமல்.) 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (புறத்திணையியல், 20). என்று இந்த ஆறு இயல்புகளைத் தொல்காப்பியர் கூறுகிருர். இப்போது கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். ஆறு தொழில்கள் ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கோடல், கொடுத்தல் என்பன, வேத சாஸ்திர புராணங்களையும் பிற நூல்களேயும் கற்றுப் பயிலுதலே ஒதல். இவற்றில் முக்கியமானது வேதம் ஓதுதல். ஓதுவதற்குள் சிறந்த தாதலின் வேதத்தை ஒத்து என்று வழங்குவர். அந்தணர் ஒதும் நூல்களில் தலே, இடை, கடை என்று மூன்று தரம் உண்டு. இவற்றை கச்சினர்க். கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் விரிவாகச் சொல்கிருர். இருக்குவேதம், யசுர்வேதம், சாமவேதம் என்னும் மூன்றும் தலையான நூல்கள். இறைவன், அகத்தியன், மார்க்கண்டேயனுர், வான்மீக னர், கவுதமனர் போன்றவர்கள் இயற்றிய தமிழ் நூல் களும் தலையான ஒத்து என்று சொல்வர். இவர்கள்