பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் இப்போது க்ரேர் நம்மைத் திருவேரகம் என்னும் திருத்தலத்துக்கு அழைத்து வருகிருர். அது காவிரிக் கரையில் உள்ள படைவீடு. ஆற்றங் கரைகளில் அந்தணர் இருந்து வேதம் ஓதி வேள்வி புரிவார்கள். பழைய காலத்தில் ஆறுகளின் இருமருங்கும் பல அகரங்கள் ஓங்கி வளர்ந்தன. திருவேரகமும் அப்படி அமைந்த அகரங்களில் ஒன்று. அங்கே அந்தணுளர்கள் மிகுதியாக வாழ்ந்தார்கள்: ஏரகத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனை வழிபட்டு இன்புற்ருர்கள். நக்கீரர் ஏரகத்தை விரிவான வகையில் வருணிக்க வில்லை. அங்கே முருகனை வழிபடும் அந்தணர்களின் இயல்பை மட்டும் கூறுகிருர். தமிழ் காட்டில் மிகப் பழங் காலக்தொட்டே அந்தணர்கள் வாழ்ந்து வருகிருர்கள். பழைய இலக்கண இலக்கியங்களில் அவர்களைப் பற்றிய செய்திகள் பல வருகின்றன. அவர்கள் வேதம் ஒதுதல், வேள்வி செய்தல், விரதம் இருத்தல், அரசர் களுக்குக் குருவாக இருந்து கலம் செய்தல், தலைவர் களுக்குப் பாங்கராக இருத்தல், தமிழ்ப் புலமையும் பெற்றி ருத்தல் முதலியவற்றைப்பற்றி அந்நூல்கள் கூறுகின்றன. பதின்மூன்றே அடிகளில் திருவேரகம் என்னும் படை வீட்டைப் பாடுகிருர் கக்ரேர். அவற்றில் 12 அடிகள் முருகனை வழிபடும் அந்தணர்களைப் பற்றிச் சொல்கின்றன. இனி அவற்றைப் பார்ப்போம்.