பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருமுருகாற்றுப்படை விளக்கம் கூடாது என்பது அவன் எண்ணம். அவர்கள் எந்த காட் டுக்குச் சென்ருலும் மதிப்பும் வாழ்வும் கிடைக்கும். ஆதலால் அவர்களே வணங்கி, "இந்தப் பஞ்சகாலத்தில் எங்களோடு இருந்து இன்னலைப் பகிர்ந்து கொள்ளும் அவசியம் உங்களுக்கு இல்லை. வளப்பமுள்ள நாடுகளுக் குச் சென்று சிலகாலம் வாழுங்கள். இந்த காட்டில் பஞ்சம் தீர்ந்து மீட்டும் வளம் உண்டாகும் போது உங்களே அழைத்துக் கொள்கிறேன்' என்று வேண்டிக்கொண் டான் அவர்கள் அப்படியே வெவ்வேறு காடுகளுக்குச் சென்றனர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆனபிறகு பஞ்சம் நீங்கியது. மீட்டும் பாண்டி காட்டில் வளம் பெருகியது. மறுபடியும் புலவர்களே அழைத்துச் சங்கம் கூட்டி வளர்த்து வர வேண்டும் என்ற ஆர்வம் பாண்டியனுக்கு எழுந்தது. பல நாடுகளுக்கும் ஒலே போக்கிப் புலவர்களே வருவித்தான். போன இடங்களில் உள்ளவர்களுடன் பழகி அங்கேயே விருப்பம் கொண்டு சிலர் தங்கி விட்டனர். பலர் திரும்பி வந்தனர். மீட்டும் சங்கத்தை கடத்தத் தொடங்கினன் பாணடியன. அவனுக்கு நெடுநாட்களாக ஒரு விருப்பம் இருந்து வந்தது. இடையிலே பஞ்சம் வந்தமையால் அதை நிறை. வேற்றிக்கொள்ள முடியவில்லை. தமிழில் உள்ள இலக்கணம் மூன்று பிரிவாக உள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற இந்த மூன்றையும் தொல்காப்பியம் கூறுகிறது. இவற்றில் பொருளிலக்கணம் சிறப்பானது என்று கூறுவர். பொருளின் வகையாகிய அகப்பொருள், புறப்பொருள் என்ற இரண்டில் அகப்பொருள் என்பது சிறந்தது. அதற்குத் தனியே ஓர் இலக்கண நூல் யாரேனும் தக்க புலவர் ஒருவரைக் கொண்டு இயற்றச் செய்யவேண்டும். என்ற ஆசை அரசனுக்கு இருந்தது. மீண்டும் சங்கம்.