பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 299. உருவான இப்போது அதைச் செய்விக்க முயன்ருன் மீண்டு: வந்த புலவர்கள் மூன்று இலக்கணங்களிலும் வல்லவர் களே. ஆயினும், தனியே புதிய இலக்கணம் எழுதச் சிறப்பான தகுதி வேண்டும். அப்படி உள்ள புலவர் ஒருவரும் அப்போது வந்து சேரவில்லை. அதனல் பாண்டியனுடைய விருப்பம் சிறைவேருமல் குறையாகவே இருந்தது. தன் குறைகளே ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்வது பாண்டியன் வழக்கம். அப்படியே இந்தக் குறையையும் கூறி வேண்டின்ை. 'எம்பெருமானே! தமிழின் உயிராக உள்ளது. அகப்பொருள் என்பார்கள். அதில் புதிய நூல் ஒன்று எழவேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேற வில்லையே!' கின்னுடைய அருள் இருந்தால் எளிதில் அது நிறை வேறும். திருவருள் புரியவேண்டும்' என்று வேண்டிக் கொண்டான், - பல காலம் கழித்து அவன் விருப்பம் கிறைவேறியது. திருக்கோயிலில் பூசை புரியும் சிவாசாரியார் இறைவன் எழுந்தருளியிருக்கும் பீடத்தின் கிழே ஒரு நாள் திருவல கிடும்பொழுது ஏதோ கணகணவென்று ஒலி எழுந்தது. என்ன என்று பார்க்கும்போது சில செப்புத் தகடுகள் இருப்பதை அறிந்தார். அவற்றை எடுத்துப் பார்த்தபோது. அவற்றில் எழுத்துக்கள் இருந்தன. உடனே பாண்டிய னிடம் அனுப்பினர். அவன் படித்துப் பார்த்தான் குத் திர வடிவில் அமைந்த அகப்பொருள் இலக்கணமாக இருந்தது. அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இறைவன் தான் தன் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த நூலே அருளினன் என்று நம்பிக் கூத்தாடின்ை அறுபது. சூத்திரங்கள் அதில் இருந்தன.