பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 3 17 மரபு என்பதற்கு வரலாறு என்பது ஒரு பொருள். பிறரால் பெறுவதற்கரிய வரலாற்றையும் பெரிய பெயரை யும் உடைய முருகனே என்றும் பொருள் கொள்ளலாம். பெயர் என்பதற்குப் பொருள் என்றும் ஒரு பொருள் உண்டு. நச்சினர்க்கினியர் அந்தப் பொருளைப் பொருத்தி உரை கூறுகிருர், பிறருக்குப் பெறலரிய முறைமையினே யுடைய பெரும் பொருளே யுடைய முருக' என்று பொரு ளெழுதி, பெரும் பொருளென்றது வீட்டினே' என்று விளக்குவார். முத்திச் செல்வத்துக்குத் தலைவகை கின்று அதனை அடியார்களுக்கு வழங்குபவன் முருகளுதலின் இவ்வாறு பொருளுரைத்தார். குன்றம் கொன்ற குன்றக் கொற்றத்து விண்பொரு கெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! பலர் புகழ் கன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக! பேரிசையாளன் செல்வத்தைப் பெற்றவர்கள் அதனல் வரும் இன் பங்களை நுகர்வதோடு சின்ருல் சிறப்பன்று செல் வத்துப் பயனே ஈதல்" (புறநானூறு) என்று சொல்வார்கள், எத்தனைக்கு எத்தனே செல்வம் இருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை அறம் புரிய வேண்டும். அதனல் புகழ் பரவும். "ஈவார்மேல் கிற்கும் புகழ்' என்பது திருக்குறள். பெரிய செல்வர்கள் தம்முடைய செல்வத்தை நுகர்வதோடு பின்றிருந்தால் அந்தச் செல்வம் அழியும்: அவர்களும் மாய்ந்து போவார்கள்; அவர்கள் பெயரும் அவர்களுடன் மறைந்து போகும். ஆனல் அழிக். தொழியும் செல்வத்தைக் கொண்டு அறம் புரிபவர்கள்.