பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_318 - திருமுருகாற்றுப்படை விளக்கம் அந்தச் செல்வம் போனலும் அவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையாமல் வாழும். உலகில் வாழும் போதும் அவர்களுக்கு இசை பெருகும். அப்பாலும் புகழ் :கிற்கும். 'சதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதியம் இல்லை உயிர்க்கு” என்று திருவள்ளுவர் கூறுவது இங்கே கினைப்பதற் குரியது. சிறிதளவு பொருளைக் கொண்டு அறம் செய்பவ அடைய புகழ் ஓரளவு பரவும். பல காலம் நிற்கும் அறங் களைப் புரிபவன் புகழ் நீடித்து கிற்கும். பலருக்குப் பயன் படும் அறங்களைப் புரிபவன் புகழ் பரந்து விரியும். மிகச் சிறந்த பொருளைப் பலருக்குப் பலகாலம் பயன்படும்படி வழங்குபவன் புகழ் நீண்டு பரந்து கிற்கும். முருகன் புகழ் அப்படிப் பரவியிருக்கிறது. அவன் தன்பால் அடியார் எது வேண்டி வந்தாலும் அதனை ஈயும் வள்ளல். அவல்ை அளிக்க முடியாத பொருள் ஏதும் இல்லை. இந்த அளவுதான் அளிப்பான் என்ற எல்லையும் இல்லை. அவன் வரம்பிகந்த செல்வம் உடையவன். பிறரால் வழங்குவதற்கு அரிய செல்வம் ஒன்று அவனிடம் உண்டு. அதுதான் முத்தி யென்னும் செல்வம். அதனை வேறு யாரிடமிருந்தும் பெறமுடியாது. அதைத் தருவ தால் அவன் புகழ் மேன்மேலும் பரவிக் கொண்டே இருக்கிறது. முருகனுடைய வள்ளன்மையையும் அதனல் விளேயும் புகழையும் புலப்படுத்தும் திருகாமத்தை அடுத்தபடி கூறுகிருர் நக்கீரர். - .