பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் 351 அருளைப் பெறும் வழி இது என்று அவனருளைப் பெற்ற வேறு ஒரு புலவன் கூறும் வாய்பாட்டில் அமைந்தது. முருகன் இருக்கும் இடங்களையும் அவற்றின் இயல்பு களையும் கூறி, அவனே எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் கூறிய பிறகு, அவனே அடைந்தால் இன்ன பரிசில் கிடைக்கும் என்பதையும் கூற வந்தார் நக்கீரர். இன்ன பரிசில் கிடைக்கும் என்பதுதான் ஆற்றுப்படையில் தலைமையானது; பயனைக் கூறுவது அல்லவா? முருகனே அணுகினல் கிடைக்கும் பயன் எதுவோ அதுதான் பரிசில். அதை நக்கீரர், "விழுமிய பெறலரும் பரிசில்' என்று சிறப்பிக்கிருர், - உலகிலுள்ள மக்களே அணுகினல் பொன் தருவார்கள். பொருள் தருவார்கள்; ஆடை தருவார்கள்; அணி தருவார்கள்; சிலம் தருவார்கள்; இலம் தருவார்கள்; இவை யாவும் சில காலம் இருந்து அழியும் தன்மை :புடையவை. எவ்வளவு பெரிய செல்வகை இருந்தாலும் அவனுக்கும் ஏதேனும் குறை இருக்கும். குறை இல்லாதார் யாரும் இல்லே. குறையுடையாரிடம் பெறும் பரிசில் குறையுடையதாகவே இருக்கும். குறைவிலா நிறைவுடை யாரே குறைவிலாப் பரிசிலேத் தர வல்லவர். குறைவிலா நிறைவுடையவனாகவும், தனக்கு உவமை இல்லாதவளுகவும் இருட்பவன் இறைவன். அவன் தரும் பரிசில வேறு யாரும் தர முடியாது அதுவே எல்லா வற்றிலும் உயர்ந்த பரிசில். வேறு எங்கும் பெறுவதற் கரிய பரிசில் அது, அதனல் அதனே, "விழுமிய பெறலரும் அபரிசில்” என்கிருர் நக்கீரர்.