பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நக்கீரர், முருகன் திருவருளேப் பெறவேண்டும் என்று விரும்பிய பக்தன் ஒருவனுக்கு. அப்பெருமானே இங்கே இங்கே காணலாம் என்று கூறி, அவனே இன்னவாறு வழிபட வேண்டும் என்பதையும் சொல்லி, அவனல் கிடைக்கும் பயனேயும் சொல்கிருர். ஒரு புலவனே மற்ருெரு புலவன் ஆற்றுப் படுத்துவதாக அமைந்திருத்தலின் இதற்குப் புலவராற்றுப்படை என்றும் ஒரு பெயர் உண்டு. - வேறுபாடு பொதுவாக ஆற்றுப்படைகளே. யார் பயன்பெறச் செல்கிருர்களோ அவர்கள் பெயரால் வழங்குவது வழக்கம். பாணரை ஆற்றுப்படுத்தில்ை பாற்ைறுப் படையெனப் பெயர் பெறும்; கூத்தரை ஆற்றுப்படுத்தினுல் கூத்த ராற்றுப்படை என்று பெயர். இது யாரிடத்தில் ஆற்றுப் படுத்துகிருர்களோ, அவரைக் கொண்டு பெயர் பெற்றிருக்கிறது. மற்ற ஆற்றுப்படைகளில் ஆற்றுப் படுத்துகிறவன், நான் உன்னைப்போல வறியவகை இருந் தேன். அந்த வள்ளலே அடைந்து கலம் பெற்றேன்" என்று கூறுவது வழக்கம். அத்தகைய பகுதி இந்த நூலில் இல்லை. நேரே முருகனே நாடிச் செல்வானுக்கு, நீ இப்படிச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் தொடங்கிவிடுகிருர் நக்கீரர். ஆற்றுப்படை என்ற பிரபந்தத்தின் வடிவத்தில் இது அமைந்தாலும் நக்கீரருடைய கருத்து முருகனுடைய பெருமையை வெளியிட வேண்டும் என்பதே, திரு-24