பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 திருமுருகாற்றுப்படை விளக்கம் சொல்வாாகள். திருமாலிருஞ் சோலேமலை என்றும் வழங்குவர். பழங்காலத்தில் இங்கே முருகன் கோயிலும் திருமால் கோயிலும் ஒருங்கே இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் புண்ணிய சரவணம' என்ற தீர்த்தம். இங்கே இருந்ததாக ஒரு செய்தி வருகிறது. சரவணம் என்பது முருகனேடு தொடர்புடையது. முருகன் திருவவ. தாரம் செய்த இடம் சரவணப் பொய்கை ஆதலின் அவன் எழுந்தருளியிருக்கும் தலங்களில் சரவணப் பொய்கை என்ற பெயருள்ள தீர்த்தம் இருப்பதைக் காணலாம். பழனியில் அந்தப் பெயரோடு ஒரு தீர்த்தம் இருக்கிறது. ஆகவே, பழமுதிர் சோலைமலையில் புண்ணிய சரவணம் என்ற தீர்த்தம் இருப்பது அங்கே முருகன் திருக்கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஆறு படை வீடுகள் என்று நெடுங்காலமாக வரும் வழக்கில் இந்த மலையையும் சேர்த்தே வழங்குவதைக் கொண்டும் இத்தலத்தில் முருகன் கோயில் இருந்ததை உய்த்துணரலாம். அழகர்மலே பற்றிய மான்மியத்தில் முருகன் திருமாலைப். பூசித்ததாக ஒரு வரலாறு வருகிறது. அதலுைம் முருகன் இத்தலத்துக்கு எழுந்தருளியதாக வழங்கும் கருத்துக்கு வலிமை உண்டாகிறது.