பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 395. 'வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு' என்று கேட்கிருர் திருவள்ளுவர். வல்லவகை இருந்தால் அவன் கையில் எந்த ஆயுதம் அகப்பட்டாலும் அது. சிறப்படையும். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ' என்பது: அதைத்தானே சொல்கிறது? வீரகிைய முருகன் கையில் இருப்பதல்ை வேலுக்குப் பெருமை உண்டாயிற்று. முருகன் சத்தியமே வடிவானவன் சத்தியம் அவனே விட்டு நீங்காது. அவன் விடும் வேல் உறுதியாகப் போய் வைரிகளே அழிக்கும். - - * மெய்விடா வீரன்கை வேல். இப்படிப் பழைய கதையையும் புதிய கதையையும் இணைத்து வேலின் பெருமையைப் புலப்படுத்துகிருர்’ புலவர். - குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கு அமரா இடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா கின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். - (கிரவுஞ்சமென்னும் மலேயை எறிந்து அழித்ததும், அசுரர்களின் வலிமையெல்லாம் குறைந்து அழியப் போர்: செய்ததும். அந்தப் பழங்காலத்தில் தேவர்களுடைய இன்னல்களைப் போக்கியதும், இன்றைக்கு என்னைக், கைவிடாமல் பாதுகாத்து கின்றதும், மலேக் குகையில்" கக்கீரர் முதலியவர்களைக் காத்ததும். மெய்யை அகன்று: கில்லாத வீரளுகிய முருகனுடைய திருக்கரத்தில் உள்ள வேல். - . குன்றம்-கிரவுஞ்சமலை. அன்று: பண்டறி சுட்டு. கைவிடாது என்பது விகாரமாயிற்று. பொதும்பு-குகை);