பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.396 திருமுருகாற்றுப்படை விளக்கம் 3 கொற்ற வேல் இன்னும் அக்த வேல் எத்தகையது? அது வீரத்துக்கு இருப்பிடமான ஆயுதம்: வீரர்கள் சிறப்பாகக் கைக்கொள்ளும் படைக்கலம், வீரத்துக்கே அறிகுறியானது. படைக்கலன்களில் சிறந்தவை வில், வாள், வேல் என்பவை. அந்த மூன்றிலும் சிறந்தது வேல். வேலின் நுனியில் இலே இருக்கும். அதற்கு நீண்ட காம்பு இருக்கும். ஆகவே அது நெடுவேல்; தாரைவேல். சூரன் தேவர்களேச் சிறையில் இட்டான் அவனையும் அவனுடன் துணையாக நின்ற அசுரர்களையும் அழித்துத் தேவர்களே மீட்ட அருஞ்செயலைச் செய்தது அந்த வேல். முருகன் செவ்வண்ண முடையவன். வேள் என்னும் பெயர் மாரனுக்கும் குமாரனுக்கும் பொதுவான பெயர். மாரனுடைய கிறம் கருமை; அவன் கருவேள். குமாரன் செங்கிறம் படைத்தவன்; அவன் செவ்வேள், அவனுடைய் திருக்கரத்தில் உள்ள அழகிய வேல் இது. சூரபதுமன் கடலிலே மறைந்து போனன். அப்போது அந்தக் கடலில் வேலே விடுத்தான் முருகன். கடல் நீரைச் சுவறச் செய்துவிட்டது வேல். சூரன் தோன்றினன். முதலில் கடல் நீரிலே குளித்து கின்றது அவ்வேல். வேல் சென்ற இடமெல்லாம் வெற்றியை கிலேகாட்டும்; ஆதலின் 'வெற்றிவேல் என்றே அதை வழங்குவர். வீரவேல், தாரைவேல், விண்ளுேர் சிறைமீட்ட தீரவேல், செவ்வேள் திருக்கைவேல்,- வாரி குளித்தவேல், கொற்றவேல்,