பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 397° பழைய காலத்தில் வழங்கிய கதை ஒன்று உண்டு. குரன் தனக்கு அரணுக ஒரு மலையை மேற்கொண்டு: அதனுள்ளே புகுந்து எங்கும் திரிந்தான் என்றும், முருகன் தன் வேலை வீசிக் குன்றும் சூரன் மார்பும் ஒருங்கே ஊடுருவும்படி துளைக்கச் செய்தான் என்றும் அந்தக் கதையின் லிருந்து தெரிய வருகிறது. “........................ கார்வந்து உறங்குசிகைப் பொருப்பும்சூர் உரப்பொருப்பும் பிளப்ப.................. மறங்குலவு வேல் எடுத்த குமரவேள்” என்பது திருவிளையாடற் புராணம். கிரவுஞ்சமாகிய மலையையும் குரனுடைய மார்பாகிய மலையையும் ஒருங்கே: பிளந்தது வேல் என்ற கருத்தை இதிற் காணலாம். "கு மார்பும் குன்றும் துளைத்த வேல் அது. இத்தகைய சிறப்புடைய வேல் நமக்குத் துணையாக இருக்கிறது. இனி" நமக்குப் பயம் எது? - - வீரவேல், தாரைவேல், விண்ளுேர் சிறைமீட்ட தீரவேல், செவ்வேள் திருக்கைவேல்,-வாரி குளித்தவேல், கொற்றவேல், சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை. (வீரத்தையுடைய வேல், நீட்சியையுடைய வேல், தேவர்களின் சிறையை மீட்ட தீரத்தையுடைய வேல், செய்ய நிறமுடைய முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள வேல், கடலில் குளித்துச் சூரனைத் தேடிய வேல், வெற்றி தரும் வேல், குரனுடைய மார்பையும் கிரவுஞ்ச மலையையும் ஒருங்கே துளேத்த வேல் நமக்குத் துணியாக இருக். கிறது. - - தாரை-நீட்சி. வாரி-கடல். கொற்றம்-வெற்றி. வேல் சடமானலும் வீரம் முதலிய பண்புகளே அதன் மேல் ஏற்றிச் சொன்னது இலக்கண.) t