பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கதை 31. "இயற்கையாகக் கூந்தலுக்கு மணம் இல்லை. மயிர்ச் சாந்திலுைம், மலரினலும், தைலத்திலுைம், புகையிலுைம் மணம் ஊட்டுவதனல் கூந்தல் மணம் பெறுகிறது. அதற்கு இயற்கையாக ஒரு மணமும் இல்லை' என்று கக்கீரர் தம் கருத்தையே சாதித்தார். "உலகில் பத்மினி சாதிப் பெண்களுக்குத் திருமேனியில் மணமும், கூந்தலில் நறுமணமும் உண்டென்று நூல்கள் சொல்லுகின்றனவே; அது பொய்யா?” "அது வெறும் கற்பனே.” "அப்படியானல் தெய்வ மகளிர்களுடைய கூந்தலில் கறுமணம் இல்லையா?" "இல்லை; அவர்களுடைய கூந்தலின் மணமும் செயற் கையால் அமைந்ததே." சிவபெருமான் நக்கீரருடைய விலையைக் கண்டான். மேலும் மேலும் அகங்தை வளர்ந்துகொண்டு போயிற்று. தன்னுடைய பாட்டுக்குக் குற்றம் சொன்னதற்காக ாக்கீரரைத் தண்டிக்க மனம் வரவில்லை, அந்தப் பெருமானுக்கு. உத்தமமான பெண்களின் கூந்தலுக்கு மணம் இல்லையென்று சொல்லி அவர் அபசாரியாகிருர்; உண்மையை மறுக்கிருர். 'இப்போது இவன் செய்து வரும் குற்றம் மிகப் பெரிது. இவனத் தண்டிக்க வேண்டும் என்று இறைவன் கினைத்தான், ஆலுைம், "இன்னும் இவனுக்குச் சிறிது போக்குக் காட்டி உண்மையை உணர்கிரு.ை பார்க்கலாம்' என்று எண்ணினன். - "இந்திரன் மனைவியாகிய இந்திராணி பேரழகி யாயிற்றே! அவளுடைய கூந்தல் இயற்கை மணம் உடையது அல்லவா?' என்று ஆண்டவன் கேட்டான். -