பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருமுருகாற்றுப்படை விளக்கம். "அவளுடைய கூந்தலும் செயற்கையில்ை மணம் பெறுவதே." ». "கலைமகளுடைய கூர்தலோ' "அதுவும் அப்படித்தான்.” "திருமாலின் மனைவியாகிய திருமகளுடைய கூந்தல்: இயற்கை மணமுடையது அல்லவா?" " அல்ல." "அப்படியானல் பராசக்தியாகிய அம்பிகையின் கூந்தவோ?’ "அதுவும் அப்படித்தான்' என்று முரட்டுத்தனமாக விடை சொன்னர் நக்கீரர். ஆண்டவன், தேவி திறத்தில் இவன் தவறு செய்துவிட்டான். இவனேத் தண்டிக்க வேண்டும். ஆனலும் நாம் இன்னர் என்பதைச் சிறிது. காட்டவேண்டும் என்று கருதித் தன் நெற்றிக் கண்ணேச் சிறிது திறந்து காட்டினன். கோபத்தினலோ, பொருமை. யினலோ பற்றப்பட்டவருக்கு அதற்குத் தடை வருங்கால் அவை மேலும் மேலும் கிளர்ந்து எழும். ஆகையால் நெற்றிக் கண்ணேக் காட்டியவுடன் நக்கீரர், "நெற்றிக் கண்ணேக் காட்டினலும் குற்றம் குற்றமே!' என்று சாதித்தார். அறிவில்ை சிறந்த நக்கீரர். அகந்தையில்ை கீழ்கிலக்கு. வந்து விட்டார். இவன் இப்போது இகழத்தக்க கீழ்மகன் ஆகிவிட்டான். அறிவு இவனிடத்திலிருந்து அகன்று. விட்டது. அகங்தை கண்களே மறைக்க இவன் உண்மையை எண்ணவில்லே. உத்தம மகளிருடைய பெருமையை நினைக்க வில்லை. உயர்ந்த பண்பும் அச்சமும் போய்விட்டன. ஆகவே இவனுக்குத் தண்டனை கொடுப்பதுதான் சரி' என்ற தீர்மானத்திற்கு வந்தான் இறைவன். உடனே நெற்றிக் கண்ணே நன்கு விழித்தப் பார்க்க அதிலிருந்து புறப்பட்ட