பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கதை 33 தி க்கீரரை வெதுப்பியது. உடம்பெல்லாம் தொழுநோய் உண்டாயிற்று, அங்கிருந்த பொற்ருமரைக் குளத்தில் போய் வீழ்ந்தார். வீழ்ந்தவுடன் அவருக்கு உணர்வு தோன்றியது. தாம் செய்த குற்றம் இன்னது என்று தெரிந்தது. ‘எம்பெருமானே. கான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவேண்டும். அகந்தையினல் பல பாவங்களேச் செய்துவிட்டேன். உன் பாட்டுக்குக் குற்றம் சொன்னது மாத்திரம் அன்று; உண்மையை மறுத்த பாவமும் என்னேச் சார்ந்துவிட்டது. உலகத்திலுள்ள கற்புடைய மகளிரையும், தேவமகளிரையும், பராசக்தியையுமே நான் இழிவாகப் பேசி விட்டேன். இந்தப் பாவம் ஏழேழு பிறவிக்கும் தொலேயாது. கருணுகிதியே, என்னேப் பாதுகாத்து என்னுடைய பிழை யையும் பொறுத்து அருளவேண்டும் என்று புலம்பினர். இறைவன், 'நீ எனக்குக் குற்றம் செய்தததனுல் பெரிய தவறு நேரவில்லை. நான் பொறுத்துக் கொள்வேன். ஆனல் கன் மகளிருக்கு அபசாரம் புரிக் கவர் எளிதிலே கலம் பெற இயலாது. கைலாச தரிசனம் செய்தால் உன் கோய் நீங்கும்” என்று சொல்லி மறைந்து போனன். உடனே நக்கீரர் எழுந்த, தாம் செய்த பிழைக்கு மிகவும் வருந்திப் புலம்பினர். மதுரைமாகரத்தையும், பாண்டிய மன்னனேயும்; சங்கப் புலவர்களேயும் விட்டுப் பிரிவதற்கு அவர் உள்ளம் இடம் தரவில்லை. பலகாலம் நெருங்கிப் பழகிய புலவர்களுடைய நட்பு இல்லாமல் போய்விடுமே என்று வருந்தினர். 'கைலாசம் எங்கே? நாம் எங்கே? என்று கினைக்க கினேக்க அவருக்குத் துக்கம் குமுறிக்கொண்டு வந்தது. இறைவன் ஆணையை மறுப்பதற் கில்லையே! ஆதலின் அவர் தம் விதியை எண்ணி இரங்கி எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு மதுரையை திரு-3