உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூமாலை : 104 குமுதா ! உன் மாமன் உனக்கும் ஊராருக்கும் தந்த உபத்திரவங்களுக்கு உகந்த பரிசு வாங்கிக்கொண்டான் ! உன்னால் சந்தேகிக்கப்பட்ட நானும் களங்கமற்றவள் என்று காட்டிக்கொண்டேன், இந்தக் காரியத்தைச் செய்து ! குமுதா: என்னை மன்னித்துவிடு சின்னம்மா ! பூமாலை: அழாதே கண்ணே அழாதே! சரி நேரமாகிறது ! குமுதா ! பாண்டியன் ! வருகிறேன். (மாணவிகளின் கண்களில் நீர். அதைக்கண்ட பூமாலை) பூமாலை : குமுதா ! என் ஒரே வேண்டுகோளை நிறைவேற்று ! (மாணவிகளைக் காட்டி) இதோ புதிய ஜெகத்தின் பூங் கொத்துகள்! இந்த இளம் இதயங்களிலே அறிவு விளக் கேற்றி வைக்கப் பாடுபடு. திரும்பிப்பார் என்னும் அறி வுரையை, நன்றாக வாழ்பவர்கள், நலிந்து கிடப்பவர்கள். நாசவேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான அறிவுரையாக்க நீயும் பாண்டியனும் முயற்சி யுங்கள்/ வருகிறேன்.. (மாணவிகளிடம்) என் சிங்காரச்சு சிட்டுகளே ! எல்லோருக்கும் வாழ்த்து 1 திரும்பிப்பார் உப தேசத்தை மறந்துவிடாதீர்கள், நான் திரும்பாத இடத் திற்குச் செல்கிறேன். குழந்தைகள் கண்ணீருடன் நிற்கிறார்கள். பூமாலையை வார்டர்கள் கூட்டிப் போகிறார்கள்). வணக்கம்.