103 பாண்டியன் : ஆங்! காட்சி 927 பத்திரிகை News (அக்காள் தம்பியைக் கொன்றாள்) [கோர்ட் நீதிபதி : (ஐட்ஜ்மெண்ட் படிக்கப்படுகிறது) பத்திரிகை மூல மாக செய்தி கேள்விப்பட்டுதான் பாண்டியன் வந்திருக் கிறார்! கொலைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யென்பது சிவசக்தி மில் முதலாளியின் சாட்சியத்தாலும், ஆஸ்பத்திரி வாட்ச்மேன் சாட்சியத்தாலும் தெளிவாகிறது. பரந்தாமனுக்கும் பாண்டியனுக்கும் விரோதம் என்கிற காரணத்தாலேயே கொலைசெய்தார் என்பது நம்பத்தகுந்த தல்ல! ஆகவே பாண்டியனை விடுதலை செய்யப்படுகிறது. (பூமாலை புன்னகை) கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குமுதா சின்னம்மா ! காட்சி 93] குமுதா : சின்னம்மா ! சின்னம்மா! பூமாலை: அழாதே குமுதா !... [ஜெயில் பாண்டியன் : நீங்கள் கொல்லவில்லை உங்கள் தம்பியை 1 அவ னுடைய பழைய செயல்கள் அவனைப் பழிதீர்த்துக் கொண்டன! பூமாலை: ஆரம்பத்திலிருந்தே அவன் நல்லவனாயிருந்தால் எனக் கேன் அவன்மீது ஆத்திரம் வரப்போகிறது. தொட்டுத் தொட்டு வளர்த்த என் செல்வத்தை துடிக்கத் துடிக்க ஏன் கொல்லப்போகிறேன். குமுதா : சின்னம்மா!
பக்கம்:திரும்பிப்பார்.pdf/111
தோற்றம்