உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கருடன்; ம்...சம்சாரமாவது ஒண்ணாவது மனுஷன் free-யா இருக்கணும், என்னாட்டம். நமக்கு உதாரணமாகத்தானே கடவுள் படைத்திருக்கிறான், மலருக்கு மலர் தாவுகிற al GOUT G... LD... பையன்: மரத்துக்கு மரம் தாவுகிற மந்தி கருடன்: டெ... பையன்: மறந்துட்டிங்களோன்னு ஞாபகப்படுத்தினே. கருடன்: கம்பர் மகன் அம்பிகாபதி! சும்மாயிருடா முந்திரிக் கொட்டை !

(தெருவிலே தொழிலாளர் ஊர்வலம் செல்லும் ஒலி கேட்கிறது.) கோஷம் சிவசக்தி மில் தொழிலாளர் கூலியை உயர்த்து. தொழி லாளர் சம்பளத்தை உயர்த்து. தொழிலாளர் சம்ப ளத்தை உயர்த்து. பரந்தாமன் : என்னடா? ⭑ பையன் : நமக்குச் சம்மந்தமில்லை. கருடன் : நமக்காமில்ல நமக்கு ! இவரும் சேந்துக்கிறாரு விஷ யத்தை சொல்லு கழுதை ! பையன் : மில் தொழிலாளிங்க சம்பள உயர்வுக்காக கிளர்ச்சி பண்றாங்க !... பரந்தாமன்: அப்படியா? அப்ப நமக்கு சம்பந்தமில்லை. கருடன்: . ஏன் இல்லை ? எனக்கு ஒரு வழி தோணுது. இந்தக் கிளர்ச்சியை சாதகமாக்கிக்கிட்டு பாட்டாளிகளைப்பத்தி ஒரு புஸ்தகம் எழுதினா இந்தச் சமயம் நல்லா விக்கும். பரந்தாமன்: ஆமாம்.... இன்றைக்கே எழுத ஆரம்பிக்கிறேன். பெயர் என்ன வைக்கலாம் - புஸ்தகத்துக்கு...ஆங்... சரி.... பாட்டாளியின் குரல்.