உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கருடன்: சபாஷ் ! பாட்டாளியின் குரல். என்ன என்ன மூளை ! பையன் : முதல்ல என் குரலை கொஞ்சம் கவனிங்க ! பரந்தாமன் ; என்னடா? பையன்: எனக்கு சம்பளம்.... மூளை ! கருடன்: (கோபமாய்) டேய் ! மில் தொழிலாளிகளுக்காக புஸ் தகம் எழுதினா பையன்: நானும் ஒரு தொழிலாளிதானுங்க !... கருடன்: பெரிய தொழிலாளி இவுரு ! பரந்தாமா ! நீ எழுத ஆரம்பிச்சுடு! லாபத்திலே உனக்கு கால், எனக்கு முக்கால். பையன் : எனக்கு... கருடன்: அறை ! (அறைதல்) காட்சி 30]

(பையன் அழுதல்) [பூமாலை வீடு -பகல் (பாமாவின் தந்தை குணரத்னம் பூமாலையிடம் தன் மகளைப்பற்றி வருத்தமுடன் கூறிக்கொண்டிருக் கிறார்] குணரத்னம் : அவள் மாத்திரமா போனாள். வீட்டை அடமானம் வச்சு, செஞ்சுப்போட்ட ஆயிரம் ரூபாய் நகையோடவும் போய்ட்டா ! பூமாலை: ஆயிர ரூபாய் நகைதானே. இந்தாருங்கள்... (தன் அணிகலன்களைக் கழற்றிக்கொடுத்து) இதை வைத்துக் கொள்ளுங்கள். (கொடுக்கிறாள்) குணரத்னம்: (அதை வாங்கி) ஏன்? இதை நான் யாருக்குப் போட்டு அழகு பார்க்கப் போகிறேன். நீயே வச்சுக்க. (கீழே போட்டுவிட்டு) எனக்குத் துரோகம் பண்ணுன வுங்க தொலைஞ்சு போய்டுவாங்க!...