43 பரந்தாமன் : அழைத்த காரியமென்ன? (இருவரும் உட்காருதல்) முதலாளி: ம்... இந்த வேலை நிறுத்தத்தைப்பற்றி... பரந்தாமன்: எல்லாம் என் ஏற்பாடுதான் - நான் காட்டிய வழியில் செல்ல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தயாராயிருக்கிறார்கள். முதலாளி: மிஸ்டர் பரந்தாமன் ! மில் தொழிலாளர்களின் கிளர்ச்சியை உங்களால்தான் நிறுத்த முடியுமென்று எனக் குத் தெரியும். கருடன் : சந்தேகமா அதிலே ! பரந்தாமன் மாத்திரம் இல்லா விட்டால் இந்நேரம் மில்லையே அழித்திருப்பார்கள் ! பரந்தாமன் : அதோட, தங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த இருந்தார்கள்!நான்தான் தடுத்தேன்! முதலாளி: சந்தோஷம் / ரொம்ப நன்றி ! என் உயிரைக் காப்பாற்றியதற்காக! தங்களுக்கு என்னுடைய சிறிய உதவியாக இந்த ஜயாயிர ரூபாயை அளிக்கிறேன். பரந்தாமன் : என்ன... பணமா ! கருடன்: வாங்கிக் கொள்ளப்பா ! தொழிலாளர் நிதியில் சேர்த்துவிடலாம்! ஏழைகளுக்காக உழைக்கவே ஜென்மம் எடுத்துட்டோம்! முதலாளி: நான் இதை லஞ்சமாக நினைத்துக் கொடுக்கவில்லை. பரந்தாமன்: நானும் இதை அப்படி நினைத்து வாங்கவில்லை. முதலாளி: இந்த ஸ்டிரைக்கை எப்படியாவது நிறுத்திவிடுவீர் களானால்.... பரந்தாமன்: நிறுத்திவிடலாம். அதற்கு புண்யகோடியை மாற் றினால்தான் முடியும் ! கருடன்: புண்யகோடி.... அவன் மூவாயிரமாவது கேட்பான்/
பக்கம்:திரும்பிப்பார்.pdf/51
தோற்றம்