44 முதலாளி: தருகிறேன் ! இப்போதே தருகிறேன். (பணம் எடுத்துத் தருகிறார்) பரந்தாமன்: தங்களுடைய நல்ல குணத்திற்காகவும், நம்மு டைய நட்பு நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு பெரிய கிளர்ச்சியை விட்டுக்கொடுக்கிறேன். முதலாளி: ரொம்ப நன்றி ! காட்சி 40] (இருவரும் எழுதல்) [மில் Ext பரந்தாமன்: (காரில் எழுந்து நின்றபடி) அன்புள்ள தொழி லாளர்களே ! நமது போராட்டம் வெற்றிபெற்று விட் டது ! நமது கிளர்ச்சி கண்டு கிடு கிடுத்துவிட்டார் முத லாளி !... வெகு சீக்கிரத்தில் சம்பள உயர்வு பிரச்னையை கவனிக்கிறேன் என்று என்னிடம் உறுதி அளித்துவிட்டார்! வீரர்களே ! வெற்றியடைந்துவிட்டோம்! புண்யகோடி : நமது தலைவர் பரந்தாமனுக்கு ! மற்றவர்கள்: ஜே! ஜே! பரந்தாமன் : ஆகவே எல்லோரும் அமைதியாக வேலைக்குச் செல் லும்படியாக உங்கள் தலைவன் என்னும் முறையில் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் வெற்றி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம். (பரந்தாமனுக்கு ஜே! என்ற கோஷமுடன் காட்சி முடிகிறது.) காட்சி 41] [பூமாலை வீடு (பரந்தாமன் உள்ளே நுழைகிறான் -கோட்டை கழற்றி ஸ்டேண்டில் மாட்டிவிட்டு மாடிக்குப் போகிறாள். படியேறிக் கொண்டே சிகரெட்டை எறிகிறான்- சிகரட் மாட்டிய கோட்டின் பையில் விழுகிறது
பக்கம்:திரும்பிப்பார்.pdf/52
தோற்றம்