உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 காமல் ஐஸ்வரியத்தைக் கேட்கும் அந்த அழகிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அப்பாவித் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் மில் முதலாளியிடம் அடகுவைக்க... பரந்தாமன்: போதும் நிறுத்து ! பூமாலை: புத்திசாலி ! புனிதமானவன்! இப்படியெல்லாம் உனக்கு புகழுரைகள் வரவேண்டுமென்று எதிர்பார்த்தேன். பரத்தைலோலன், பாதகன் என்ற பழிச்சொற்கள் வரு மென்று நினைக்கவேயில்லை. (பரந்தாமன் போகிறான். பூமாலை அவன் போவதைப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள் கலங்கியபடி) காட்சி 42] [பூமாலை வீடு-மாடி அறை (பாண்டியன் ஏதோ மளமளவென்று எழுதி எழுதித் தள்ளுகிறான்.குமுதா அருகே ஆவலுடன் சென்று கவனிக்கிறாள்] குமுதா : என்ன திடீரென்று எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்? பாண்டியன் : நல்ல சிச்சுவேஷன் கிடைத்தது பாட்டு எழுது கிறேன். குமுதா: எந்தப் பத்திரிகைக்கு? பாண்டியன்: நான் எந்தப் பத்திரிகைக்கு எழுதுவேன்... குமுதா எங்கே பாட்டைக் கேட்கலாம்... காட்சி 43]. "கலப்படம் கலப்படம் ' (பாண்டியன் பாடுகிறான் எழுதியதை) (கருடன் பதிப்பகம்- மாலை "கலப்படம் " பாட்டை ஆபீஸ் பையன் பாடுகிறான். பரந்தாமன் வந்து அவனிடமுள்ள பத்திரிகையை வாங்கி கிழித்தெறிகிறான். அவன் வாய்மட்டும் ஆத்திரத்துடன் முணுக்கிறது. 66 P.7 பாண்டியன் என் று முணு 4