48 பரந்தாமன்: ஆமாம்! அழைத்துக் கொண்டு போயி ஆராரோ பாடி பாப்பாவைத் தாலாட்டு போ ! குமுதா: (கோபமுடன்) போதும்! பூமாலை: (அதட்டல்) குமுதா ! (குமுதா போய்விடுகிறாள் பாண்டியனுடன்) பரந்தாமன்: இது வீடா, வேசி மடமா என்று தெரியவில்லை எனக்கு! பூமாலை: பரந்தாமா! நிதானமாகப் பேசு ! ஒரு பரந்தாமன்: பிறகென்ன, கல்யாணமாகாத பெண்ணை காலிப் பயலுடன் திரியவிடுவது மாத்திரம் நன்றாயிருக் கிறதா? பூமாலை: கல்யாணமாகிவிட்டது அவளுக்கு. குமுதாவும் கணவனும் மனைவியும். பாண்டியனும் பரந்தாமன்: காந்தர்வ மணமா அல்லது கனவு கண்டாயா? பூமாலை: பதிவுத் திருமணம். பரந்தாமன்: பதிவுத் திருமணம். நான் ஒருவன் இருக்கிறேன் வீட்டில். எனக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம்... பூமாலை நீ வீட்டிலா இருக்கிறாய்...' வீடு ' என்றாவது உன் வாயால் சொன்னாயே. அதுவே எனக்கு சந்தோஷம் !... பரந்தாமன் : அக்கா! உன்னை உணர்ந்துகொண்டேன். தம்பீ தம்பீ என்று நீ பாசங்காட்டியதெல்லாம் வெறும் பாசாங்கு என்று புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் குமுதா உனக்காக வாழ்கிறாள், உன் மனைவிதான் அவள் என்று அன்பு வழிவதுபோலக் கூறிவிட்டு, இப்போது யாரோ ஒரு அனாதைப் பயலுக்கு அவளை மனைவியாக்கிவிட்டேன் என்று கூறுவாயா ! பூமாலை: உனக்கேன் மனைவி ? உனக்குத்தான் நினைத்தபோ தெல்லாம் மனைவிகள் கிடைக்கிறார்களே! அன்பைக் கேட்
பக்கம்:திரும்பிப்பார்.pdf/56
தோற்றம்