உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பரந்தாமன்: பாடுமா? புண்யகோடி: எப்படித் தம்பி பாடும் ஊமைங்கிறேன்..... பரந்தாமன் : ஓகோ ஏன் குயிலு வார்த்தையை சொல்லியா கூவுது. என்னமோ கத்துது. பாடுதுங்கிறான். அதையுந்தான் குயில் புண்யகோடி : ஹி ஹி ஹி...ஆமா...ஆமாம். நல்லாசொன்னீங்க ஒரு வார்த்தை. (ராதா காப்பியுடன் வருகிறாள் மேசையிடம்) பரந்தாமன் : வயதான காலத்தில் கல்யாணம் செய்துகொள் வதே... சமையல் செய்யச் சொல்லி சாப்பிட, சங்கீதம் பாடச் சொல்லி ரசிக்கதானே. புண்யகோடி: உங்களுக்குத்தான் தெரியுமே. அந்தப் பாழாப் போன மில்லுக்கு உழைக்கவே சரியாயிருக்கு நேரம்... பரந்தாமன்: பாவம்... அதுவும் வயதான காலத்திலே... புண்யகோடி : என்ன தம்பி சும்மா வயசாயிட்டு, வயசாயிட்டுங் கிறிங்க...(காபியை ராதையிடம் வாங்கியபடியே) தம்பி ! தொழிலாளர் விஷயமெல்லாம் எப்படி யோசனை பண்ணி யிருக்கீங்க...அதை மறந்திடா தீங்க... (காபி அருந்தல்) பரந்தாமன் : மறப்பேனா. மறக்கவே மாட்டேன். நினைத்ததை முடிக்காமல் விட்டதில்லை இந்தப் பரந்தாமன்... புண்யகோடி : எங்கே முடிக்காம விட்டுடுறீங்களோன்னு பார்த் தேன். பரந்தாமன் : அப்ப வர்ரேன்... காட்சி 50] குமுதா மதறாஸ் வீடு : ஹால் [குமுதா பாண்டியன் இருக்க குண்டுமணி வருதல்] பாண்டியன் : குண்டுமணி எல்லாம் பிரின்ட் ஆயிட்டுதா...