உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புண்யகோடி: அப்படியா, வாங்களேன் வீட்டுக்குப் போகலாம். பரந்தாமன்: எனக்கு அவசரமா வேலையிருக்கிறது... புண்யகோடி: சரிதான் வாங்க... நம்ம கல்யாணத்துக்குக்கூட வர்லே. கல்யாண விருந்தாக ஒரு கப் காப்பி சாப்பிட்டு வரலாம். பரந்தாமன் : ஓகோ... wife இங்கதானா? ! புண்யகோடி: ஆமாம். பரந்தாமன் : சரி வாங்க காரில் போகலாம். காட்சி 49] [புண்யகோடி வீடு. [கார் போய் நிற்கிறது. பரந்தாமனும் புண்யகோடியும் இறங்குகிறார்கள்]. புண்யகோடி : வாங்க ! உள்ளே வாங்க... பரந்தாமன்: கல்யாணத்தை ரொம்ப சிக்கனமாத்தான் செய்து விட்டீர்கள் இல்லையா... புண்யகோடி: ஆமாம்...... (உள்ளே திரும்பி) ராதா ராதா கொஞ்சம் வந்துட்டுப் போ. (ராதா வந்து நிற்கிறாள்- அவளைக் காட்டி) புண்யகோடி : இதுதான்... பரந்தாமன்: ஓ.... பாண்டியனுக்கு தங்கச்சிவேறெ இருக்கா? புண்யகோடி : தங்கச்சியா ! இது அவனுக்கு சின்னம்மா 1 என் சம்சாரம்... பரந்தாமன்: ஓ... அப்படியா... புண்யகோடி: (அசட்டு சிரிப்பு) ராதா ! டீ, காப்பி ஏதாச்சும் இருந்தா கொண்டா சீக்கிரம்.... (ராதா உள்ளே போகிறாள்). புண்யகோடி : ரொம்ப தங்கமான பொண்ணு! ஒரே ஒரு குறை! வாய்தான் ஊமை! ஆனா சுமாரா படிச்சிருக்கு...