உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 (கோட்டை மாட்டிவிட போய் விடுகிறான்-ராதா படுத்துக்கொள்கிறாள். பரந்தாமன் வந்து அவள் கண்களைப் பொத்த, திடுக்கிடுகிறாள்-பரந்தாமன் சிரிப்பு ) பரந்தாமன் : எப்படி வந்தேன்னு ஆச்சரியமாயிருக்கா ! இது விஞ்ஞான காலம், கடிகாரம் தேவைப்படுகிறது ! (தெருவில் போய்க்கொண்டிருந்த புண்யகோடி மணிக் கூண்டைப் பார்க்க, 121 எனவே திரும்புகிறான். இங்கே வீட்டினுள் - அவன் நெருங்க, அவள் நடுங்க, புண்யகோடி பிரவேசம்) புண்யகோடி: அடபாவி ! பாதகா] (பரந்தாமன் திகைத்தல்) புண்யகோடி: அடே கலியுக இந்திரா ! பாட்டாளிகளின் தலைவன் நீதானாடா! உன்னை பெரிய தலைவன்னு நம்பி நான் மோசம் போனேண்டா ! அயோக்கிய பயலே ! இந் திரனை கௌதமர் சபிச்சாராம், உடம்பெல்லாம் கண்களாப் போச்சொல்லி ! உன்னை அப்படி சபிக்கக்கூடாது ! ரெண்டு கண்ணை வச்சிக்கிட்டே நீ இப்படி ரெண்டகம் பண்றியே உடம்பெல்லாம் கண்ணாப்போனா நீ ஊர்ப் பெண்களையெல் லாம் விடமாட்டே! உன்னை உயிரோடவே விடக்கூடாது! பரந்தாமன்: ஏ கிழவா! மரியாதையாகப் பேசு ! புண்யகோடி: ! என்ன சொன்னே சண்டாளப் பயலே ! (உலக்கையைத் தூக்கிவர, பரந்தாமன் ஓட்டம்) புண்யகோடி: இந்தப் பகல் வேஷக்காரனை நம்பி பாட்டாளி மக்களை யெல்லாம் கெடுத்துட்டேன் பாவிப் பயல் ! (போலீஸ் வந்து அரஸ்ட் செய்கிறது) சப்-இன்ஸ்பெக்டர்: புண்யகோடி நீர் கைதுசெய்யப்படுகிறீர்! புண்யகோடி : ஆ ! ஏன்?