உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 பரந்தாமன் : விதியின் விளையாட்டு எல்லாம்! பாமா: விதி / பரந்தாமன் : ஆம் விதி ! ஒரு விபரீதமான பாரசூட் / அதைப் பிடித்துக்கொண்டால் அது எங்கு இறக்கி விடுகிறதோ அங்குதான் இறங்க வேண்டும்! பாமா: அறியாமை என்ற ஆகாய விமானத்தில் ஏறியவர்களுக் குத்தான் அந்தப் பாராசூட் தேவைப்படும்! அப்படி ஏறிய முட்டாள் நான்தான்/ முட்டாள் நான் தான்! பரந்தாமன்: நீ பழைய சாஸ்திரங்களை படித்ததில்லை. நீ பாமா : எங்கே அந்த சாஸ்திரங்களை கொண்டுவா? ஆணுக் கோர் நீதி பெண்ணுக்கோர் நீதி சொல்லும் அந்த அக்ரம சாஸ்திரத்தைக்கொளுத்தி அந்த நெருப்பிலேயே உன்னையும் போட்டு வேக வைக்கிறேன், துரோகி ! பரந்தாமன் : பாமா! வேசியாக மாறியதுமல்லாமல் அதை மறைக்க வேகமாகவும் பேசுகிறாய் ! பாமா: ஆம், வேசிதான். ஆனால், மறந்து விட மாட்டேன் உன்னுடைய மாஜி காதலி என்பதை ! ஏனடா வேசியாக மாறினேன்? வேடிக்கை விநோதங்களில் காலத்தைக் கழிக் கவா? இல்லை. இல்லையடா இல்லை. வெந்துகொண் டிருக்கும் என் உள்ளத்திலிருந்து கிளம்பும் தீ ஜ்வாலைக்கு உன்னை இரையாக்க! வேதனைக் கனலிலே கூர் தீட்டப் பட்ட வேல் முனைக்கு உன்னை விருந்தாக்க! பாமா பரத் தைக் கோலம் பூண்டது பணம் சம்பாதிக்க அல்ல. உயிர் வாழ. உயிர் வாழ்வது சாகப் பயந்து அல்ல. சண்டாள பரந்தாமனை பழிவாங்க! பழிக்குப் பழி வாங்க! இதோ பாமாவின் காரியம் முடிந்துவிட்டது. எண்ணம் ஈடேறி விட்டது ! ஈடேறி விட்டது ! (என்று கத்தியெடுத்துக் குத்தப்போக, பரந்தாமன் தப்பி விடுதல்.) 6