80 வர்ரியா நான் வரட்டுமா? (எழுந்து வந்து) அன்புக்கரசீ! அழகு மணி மாளிகையின் அழங்காரத் திருவுருவே ! அழித் தெழுதாச் சித்திரமே ! (திரையில் குரல் ) குரல்: அழுத்தெழுதாச் சித்திரமே! விளக்கே ! கட்டாணி முத்தழகி ! ஆடிவரும் பொன் கண்கவரும் ரத் தினமே ! பரந்தாமன் : ! யார் ? (பாமா வெளிப்படுகிறாள். பரந்தாமன்: ஆ! பாமா! பாமா: நானேதான்! அன்புக்கரசீ என வர்ணித்தாயே அந்த அரசியின் சரசி வேஷத்தைப் பார்! அழகு மணி மாளிகையின் அலங்காரத் திருவுருவம் ! சமுதாயக் குட்டிச் சுவற்றின் நிழலில் சருக்கி விழுந்து உருக் குலைந்து கிடப் பதைப் பார் / அழித்தெழுதாச் சித்திரம்! நாள்தோறும் இங்கு நடமாடும் புதுப் புது ஓவியக் கலா ரசிகர்களால் திருத்தி எழுதப்பட்டு தெருவில் நாசமாகிக் கிடப்பதைப் பார்! ஆடிவரும் பொன் விளக்கு / அனுதினமும் தேடி வரும் ஆணழகர் கையில் அகப்பட்டு அணைந்து கிடப்பதைப் பார் / கட்டாணி முத்தழகி ! மொட்டாகவே கருகிவிட்ட தைப் பார்! கண்கவரும் ரத்தினத்தில், மண்படிந்து கிடப் பதைப் பார்! கயவனே, காதகனே ? கவிதை பேசிய காதற் புலவனே ! பார் ... பார் ... பார் ... பார்? பரந்தாமன்: பாமா பொறு ! போனதை மறந்துவிடு ! ! ! பாமா: மறப்பதா! என் மானமே போய்விட்டதடா மகா பாபி! பரந்தாமன்: மானத்தை இழக்க நீ தானே காரணம் !.... பாமா: ஆமாம். உன் காதல் மாளிகையிலே, கனகமணி கட்டி லிலே, உல்லாச உப்பரிக்கையிலே, ஒய்யார கீதம் பாடியபடி அல்லும் பகலும் இணைபிரியாத அன்புத் தெய்வமாக வைத் திருந்தாய். நான்தான் அவமானச் சாக்கடையில் தொப் பென்று குதித்து கல்லாக மாறிவிட்டேன்! அப்படித் தானே!
பக்கம்:திரும்பிப்பார்.pdf/88
தோற்றம்