உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருடன் : 83 நல்ல மானம்டா ! மன்னிப்புக் கேக்கறதாலேயே ஒரு மானம் அழிஞ்சிடும்னா அப்பேர்ப்பட்ட மானம் இருக் கவே வேண்டாமே. பரந்தாமன்: சபாஷ்.

காட்சி 76] புண்யகோடி: குண்டுமணி: என்னய்யா.... ஏ....பரந்தாமன் எங்கே? புண்யகோடி: அந்த பரந்தாமன் எங்கேடா. குண்டுமணி: என்னய்யா ஒதற்றே. [பூமாலை வருகிறாள்] பூமாலை: யார் நீங்கள்?

[பூமாலை வீடு (ஓடுகிறான்) புண்யகோடி: யாரா ? மோசக்காரனை நம்பிய முட்டாள். தருதலைப் பயலைப் போயி தலைவன்னு தலையிலே தூக்கிவச்சு கிட்டு ஆடிய மடையன் பூமாலை: என்ன சொல்றீங்க ... புண்யகோடி: என்னம்மா சொல்லணும் ? உன் தம்பிசெஞ்ச வேலைக்கு - நூத்துக் கணக்கான தொழிலாளர்ங்க வயத்ல மண்ணைப் போட்டுவிட்டானம்மா !... பூமாலை: எல்லோரையுந்தான் விடுதலைசெய்து விட்டார்களே. புண்யகோடி: கோர்ட்ல விடுதலை செஞ்சாங்க. கிளர்ச்சிக்கு முக்யமானவங்களையெல்லாம் மில் முதலாளி வேலையை விட்டு நீக்கிட்டாரு என்னையும் சேத்து. நூற்றுக்கணக் கான குடும்பம் தவிக்குதுன்னா யாராலம்மா வந்தது இந்த அநியாயம்? பூமாலை: பொறுங்கள் பதறாதீர்கள் ... புண்யகோடி: பதறாம என்ன பண்றது. சொந்த விஷயத்துக் காக புரட்சி பண்ணச் சொல்லி இவ்வளவு ஏழைகளோட