உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சோத்ல மண்ணைப் போட்டுட்டானே பாவி. நாங்கல்லாம் நிழல் மாடு - காடு கழனிலே வேலை செய்யத் தெரியாது- எங்களுக்கு வேறஎன்ன வேலை தெரியும் பிச்சை எடுக்கலாம் அவ்வளவுதான். ம் எங்கம்மா உன் தம்பி? பூமாலை: அவன் வீட்டில் இல்லை. புண்யகோடி: ம்...அக்ரமக்காரன். அநியாயக்காரன். பூமாலை: ஐயா, நானே போயி மில் முதலாளியைப் பார்த்து உங் களுக்கெல்லாம் திரும்பவும் வேலை தரும்படி கேட்கிறேன். நீங்கள் போங்கள் தயவு செய்து. புண்யகோடி: அந்தப் பய மட்டும் கண்ல அகப்பட்டான்னா... காட்சி 77] (போகிறான்) [மில் முதலாளி வீடு (முதலாளி காரைவிட்டு இறங்கிப் போக - பூமாலை "ஐயா ஐயா" என ஓடுதல்) முதலாளி யார்ரா இது? பையன் : இவங்கதான் பரந்தாமனின் அக்காள் / முதலாளி: பரந்தாமன் அக்காள்... இங்க எங்க வந்தே... போ- போ பூமாலை : ETTE ... கோபிக்காதீர்கள்... நான் வந்த விஷயம்... முதலாளி: பரந்தாமனுக்கு பெண் கேட்க... இல்லியா? பூமாலை : பரந்தாமனுக்கு பெண் கேட்க அல்ல-பாட்டாளி களுக்கு வாழ்வு கேட்க! முதலாளி: என்ன உளர்றே? பூமாலை : பல தொழிலாளிகளை கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள் என்பதற்காக வேலையைவிட்டு நீக்கிவிட்டீர்கள். அவர்கள் எல்லாம் வேதனை தாங்காமல் வாடுகிறார்கள். அவர்களை மறுபடியும்...