பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ❖

திரும்பி வந்த மான் குட்டி



வந்து கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. பட்டினி கிடந்தேன். தண்ணிர் கூடக் குடிக்கவில்லை. தோட்டத்துக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள். நான் துள்ளி ஓடவில்லை; சோர்ந்து சோர்ந்து நின்றேன்.

“தினமும் பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் அந்த இரண்டு குழந்தைகளும் என் பக்கத்திலே இருப்பார்கள். நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து அவர்கள் வருந்துவார்கள். தங்கள் அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

“அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணிரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும், தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணிரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும், உடம்பு நாளுக்கு நாள் இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் சாய்ந்து படுத்து விட்டேன்.

“என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, அவள் அப்பாவிடம், ‘அப்பா, அப்பா,