பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 9


நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீர்கள்? ஆனால் பாவம், வந்தது முதல் இதற்கு உடம்பு சரியில்லை. துள்ளிக் குதிக்கவும் இல்லை; சாப்பிடவும் இல்லை. செத்துப்போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. பேசாமல் காட்டிலே கொண்டு போய் விட்டு விடலாம்’ என்றாள். ‘அது தான் சரி, அப்படியே செய்வோம்’ என்றார் அந்த அப்பா.

“அன்று மாலையே ஒரு வண்டியிலே என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டு வந்து விட்டு விட்டார்கள். நல்லவேளை, நான் திரும்பி வந்து சேர்ந்தேன்.”

அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “ஏனம்மா, பெரிய பங்களா, பெரிய தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய நிறையக் காய்கறி, பழங்கள். இவ்வளவு இருந்தும் இங்கே வந்து விட்டாயே?” என்று கேட்டது குட்டிமான்.

“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள்; கழுத்து வலித்தது. சுதந்தர மாகத் துள்ளித் திரியவும் முடியவில்லை; இங்கே தேவையான நேரத்திலே தேவைப்பட்டதைத் தின்னலாம்; அங்கே அவர்கள் கொடுப்பதைக் கொடுக்