அழ. வள்ளியப்பா
❖ 13
திருகினான். விழி பிதுங்கி அது உடனேயே இறந்து விட்டது! பிறகு, அதன் தோலை உரித்தான். கறி சமைக்கக் கொண்டு போனான். அதைப் பார்த்து என் உடம்பு நடுநடுங்கியது. உடனே தப்பித்து ஓடி வர நினைத்தேன். ஆனாலும், அந்தச் சிறு பெண் உமாவை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அவ்வளவுதூரம் அவள் என்னிடம் பிரியமாக இருந்தாள். நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்துத் தொடர்ந்து அங்கேயே இருந்தேன்.
“இன்று அதிகாலையில், அந்த வீட்டுக்கு நாலைந்து பேர் ஒரு காரிலே வந்து இறங்கினார்கள். ‘இவர்களுக்கு இங்கே விருந்து நடக்குமே! விருந்து என்றால் நமக்கல்லவா ஆபத்து’ என்று நினைத்தேன். இப்படி நான் நினைத்த சிறிது நேரத்தில், உமா என்னிடம் ஓடி வந்தாள்; சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்; வேகமாக நடந்தாள்; வெகு தூரம் நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும், உமா என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள். உமாவுக்கு என்னை விட்டுப்பிரிய மனமே இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஆயினும், நான்