பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 ❖

திரும்பி வந்த மான் குட்டி



“நான் இப்போது எங்கிருந்து வருகிறேன், தெரியுமா? சிறிது தூரத்திலேயுள்ள நகரத்திலிருந்து தான். என்னையும் இன்னொரு முயலையும் ஒரு வேடன் பிடித்துச் சென்று, அந்த நகரிலே ஒரு பெரிய பணக்காரர் விட்டிலே விற்று விட்டான். அந்தப் பணக்காரர் வீட்டிலே ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்தப் பணக்காரர் வீட்டுப் பெண் குழந்தை என்னிடம் மிகவும் அன்பாக இருந்தாள். அவள் பெயர் உமா.

“ஒரு நாள் அந்தப் பணக்காரர் வீட்டுக்கு வெளியூரிலிருந்து அவருடைய மாப்பிள்ளையும் அவருடைய உறவினரும் இரண்டு மூன்று கார்களிலே வந்து இறங்கினார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சாயங்கால நேரத்திலே அவர்கள் வீட்டுச் சமையல்காரன் எங்கள் அருகே வந்தான். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தான். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தான். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று சொல்லி, அதைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றான். சென்றவன், சட்டென்று அதன் கழுத்தைப் பிடித்துத்