பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 29


வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் அம்மா அவனை நாலைந்து தடவைகள் எழுப்பிப் பார்த்தும் பயனில்லை.

“ஒ பொன்னா, எழுந்திருடா. ஊரெல்லாம் சுதந்தர தினம் கொண்டாடுது. எதிர் வீட்டு இனியன், பக்கத்து வீட்டுப் பழனி எல்லாரும் குளிச்சு முழுகி, அழகாய் உடை உடுத்தி, கொடி ஏத்துகிறதிலே கலந்துக்கப் போயிட்டாங்க. நீ மட்டும் இப்படி எட்டு மணி வரை தூங்கிறியே!” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.

“சும்மா போம்மா. இன்னிக்கு சுதந்தர தினம். சுதந்தர தினத்திலே சுகமாகத் தூங்கக்கூட எனக்குச் சுதந்தரம் இல்லையா? அதுக்குத்தானே ஸ்கூலிலே லீவு விட்டிருக்காங்க?” என்று சொல்லி விட்டுப் போர்வையை நன்றாக இழுத்து முகத்தையும் மூடிக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.

“சரி நல்லாத் தூங்கு. ஒரு வழியா நாளைக் காலையிலே எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனாப் போதும்.”

அம்மா அலுப்புடன் கூறிவிட்டு, சமையலைக் கவனிக்கப் போய்விட்டாள்.