பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உயிரிரக்கம்

உலகிற் பேணுதற்குரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் இப்பிறப்பினால் அடையத்தக்க பயனைக் காலம் உள்ளபோதே அறிந்து அடைதல் வேண்டும என்பது இராமலிங்க வள்ளலாரது பெருவேட்கையாகும். எல்லா வுலகங்களையும் எல்லாப் பொருள்களையும் எல்லாவுயிர் களையும் எங்கும் நிறைந்த இயற்கை விளக்கமாகிய தனது அருள் என்னும் சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கும் முழுமுதற் பொருளே கடவுள். உண்மையறிவின்ப வடிவினராகிய கடவுளின் முழுநிறைவாகிய இயற்கையின்பத்தைப் பெற்றுத் தம்முடைய விழைவு அறிவு செயல் என்பன எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாமல் நிகழ வாழ்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வை அடைவதே மக்கட் பிறவியால் ஒவ்வொருவரும் அடைதற்குரிய பெரும் பயனாகும். உலக மக்கள் தமது உயிர்க்குயிராகிய கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டல்லது மேற்குறித்த பெரும் பயனை அடைதல் இயலாது என்னும் மெய்யுணர்வு கைவரப்பெற்றவர்களே இவ்வுலகில் அருட்பருவ வளர்ச்சியைப்பெற்ற அருளாளராவர்.

உலகெலாம் இயக்கும் அருட்பெருஞ்சோதியாகிய இறைவன் ஒரறிவுயிராகிய புல்முதல் ஆறறிவுயிராகிய