பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளைப்
பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றென நீ சொன்னவாறு இயற்றா
திருந்த தோர் இறையுமிங்கிலையே

(திருவருட்பா 3509)

சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படிவழியாக அமைந்த நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து ஆறாதாரங்களிலும் முழுமுதற் பொருளைத் தியானிக்கும் சிவயோகநிலையிலும் 'அவனே தானேயாகிய' அந்நெறியில் ஏகனாகி இறைபணி நிற்றலாகிய ஞானநன்னிலையினும் நிலைபெற்ற அருட் பிரகாச வள்ளலார், உலக மக்கள் அனைவரும் உயிர்க்குயிராகிய இறைவன் திருவருளை எளிதிற் பெற்று ஈறிலாப்பேரின்பத்தை நுகர்தற்குரிய சிறந்த உபாயமாக உயிரிரக்கம் என்னும் சீவ காருண்ய ஒழுக்கத்தையே சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்கள். சீவகாருண்ய ஒழுக்க நெறியில் நிற்போர் அருட் பெருஞ்சோதியாகிய ஆண்டவனைத் தம் அகத்தே கண்டு வழிபடுதற்குரிய தியானம், யோகம், தவம் ஆகியவற்றை யாவரும் உணர எளியமுறையில் அறிவுறுத்தியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்:-

'அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட்பிரகாசம் உள் ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா. ஒருபொருளினது உண்மையையறிதல் ஆன்ம அறிவு. பிண் டத்தில் அகப்புறம் ஜீவன் ஒரு வஸ்துவின் பிரயோசனத்தையறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம். ஒரு வத்துவின் நாமரூபத்தையும், குணகுற்றங்களையும், விசாரித்தறிதல் கரணமாய மனஅறிவு. பிண்டத்தில் புறப்புறம், கண் முதலிய இந்திரி