பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

யங்கள். ஒரு பொருளினது, நாமரூப குணகுற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்தரியக்காட்சி, இந்திரிய அறிவு. இது போலவே கரணக்காட்சி, சீவக்காட்சி, ஆன்மக் காட்சியுமுண்டு. இதுபோல் அண்டத்தில் அகம், அக்கினி. அண்டத்தில் அகப்புறம் சூரியன். அண்டத்தில் புறம். சந்திரன். புறப்புறம், நட்சத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் ஆக எட்டிடத்திலும் கடவுட்பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தால் உள்ள இடம் பிண்டததில் புருவமத்தி. அண்டத்தில் பரமாகாசம். காரணகாரியமாயுள்ள இடம் நான்கு. பிண்டத்தில் விந்து நாதம். அண்டத்தில் மின்னல் இடி. சர்வயோனியிடத்தும் விந்து விளக்கமாகிய மின்னலிடத்தும் நாதவிளக்கமாகிய இடியிடத்தும் இதல்லாது, பாரொடு விண்ணாய்ப்பரந்ததோர் சோதி என்றும் சோதியுள் சோதியுள் சோதியாயும் ... மேற்குறித்த அகமாகிய ஆன்மப்பிரகாசமே ஞானசபை. அந்தப் பிரகாசத்துக்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவு நடம். இதுதான் ஞானாகாச நடன மென்றும் அசைவுற்றதே நடராச ரென்றும் ஆனந்தநடன மென்றும் சொல்லுகின்றது. ஆதலால் நாம் தினம் ஆறுகாலத்திலும் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்க வேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்தவேண்டும்.'

என வள்ளலார் தரும் தியான விளக்கம் இங்குமனங் கொளத்தகுவதாகும்.