பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


எனவும், வள்ளலார் தரும் அதுபவ விளக்கம் இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும்; குளம் என்றது நெற்றியினை.

இவ்வாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்றவைத்து இறைவனைத் தியானிக்கும் இம்முறையே சிறந்த தவமாகுமென்பதனை,

மன்புருவ நடு முதலாய் மனம் புதைத்து
நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வார்

(3259)

என வரும் தொடரில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

உண்மையான ஞானமென்பது உயிர்களிடத்திலும் உயிர்க்குயிராகிய இறைவனிடத்திலும் செலுத்தும் அன்பேயாகும். இவ்வுண்மை

ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர்
ஞானம் உண்டார்

(பெரிய சம்பந்தர்-843)

என வரும் சேக்கிழார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். அன்பின் மிகுதியாகிய ஆர்வத்தையுடைய உருகு மனத்தடியார்கள் பிறவிவேர் அறுக்கும் இறைவனைக் கண்டு இன்புறுவர். எவ்வுயிர்க்கும் இரங்குதலாகிய அன்பினையுடையவர்கள் எவ்விடத்தும் இறைவன் திருவடியினைக் கண்டு மகிழ்வார்கள் என்னும் உண்மையினை,

ஆர்வமுடையவர் காண்பர் அரன்றன்னை
ஈரமுடையவர் காண்பார் இணையடி

என வரும் தொடரில் திருமூலநாயனார் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். அன்பினில் விளைந்த ஆரமுதே என்பது திருவாசகம், 'ஈர அன்பினர் யாதும் குறைவிலார்'