பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


ஆகாரங்கொடுக்க நினைத்த போது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக்கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறிய வேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால் ஞானிகளென்றே உண்மையாக அறிய வேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தி யின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்களாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறிய வேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறிய வேண்டும்.

சீவகாருணிய ஒழுக்கமுடையவர்களாகிச் சீவர்களைப் பசியென்கிற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தவ ராயினும், எந்தச் செய்கையையுடைவர்களாயினும், தேவர், முனிவர் சித்தர் யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையராவர்களென்று சர்வ சக்தியையுடைய கடவுள் சாட்சியாகச் சத்தியஞ் செய்யப் படுமென்று அறிய வேண்டும்.'

மேற்குறித்த வள்ளலாரின் அருள் மொழிகள் உயிர்களின் உணர்வொழுக்கங்களை அழித்து அவ்வுயிர்கட்கு