பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


எனவும் வரும் திருவருட்பாத் தொடர்களில் அருட்பிரகாச வள்ளலார் விரித்தும் தொகுத்தும் விளக்கியுள்ளமை அவர்தம் சித்தாந்த சாத்திரப் புலமையை நன்கு தெளிவுபடுத்துவதாகும்.

அருட்பிரகாச வள்ளலார் அருளிய நெஞ்சறிவுறுத்தலில் வள்ளலார் தம் நெஞ்சினை நோக்கி இன்னின்னார் இருக்குமிடங்களைச் சேராதே எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தும் முறையில் 630 முதல் 651 வரையுள்ள கண்ணிகள், சைவசமய சந்தான குரவராகிய உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடுதூதில் 110 முதல் 119 ஆம் அடிவரை உள்ள பகுதியினை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.

தில்லைச் சிற்றம்பலவன் கோயில் முதலாக, திருக்கயிலாயம் ஈறாக உள்ள திருத்தலங்களில் கோயில் கொண்டருளிய சிவபெருமானை நோக்கி விண்ணப்பம் செய்யும் முறையில் வள்ளலார் பாடிப்போற்றிய விண்ணப்பக் கலிவெண்பா, உமாபதி சிவம் அருளிய தெனக் கருதப்படும் “கோயில் திருவேட்களம்” எனத் தொடங்கும் திருப்பதிக்கோவையென்னும் பனுவலை அடியொற்றி அமைந்ததாகும். இவ்விண்ணப்பக் கலிவெண்பா இத்திருத்தலங்களில் பாடிய திருமுறை ஆசிரியர்களின் வரலாறுகளையும், இப்பதிகளில் பாடப் பெற்ற திருப்பதிகங்களின் சொற்பொருள் அமைப்பினையும், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுடைய அருள் நலன்களையும் விரித்துப்போற்றும் முறையில் 417 கண்ணிகளால் இயன்றதாகும். ஒன்று முதல் 277 வரை உள்ள கண்ணிகளில் தில்லைமுதல் கயிலை ஈறாக உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் குறிக்கப் பெற்றன. 278 முதல் அமைந்த பிற்பகுதியில் கயிலைப்பெருமானை