உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210


அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சியின்றிக் கிடந்த காலம்போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே இவ்வுலகினிடத்து புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று, முதலியவாகவும் பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல் வெடிப் புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாபரயோனி வர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலிய வாகவும், தவளை சிறுமீன், முதலை சுறா திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து தேய்ப்புண்டல், நசுக் குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து, இறந்து அவ்வூர்வன, நீர் வாழ்வன யோனிவர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் ஈ, வண்டு, தும்பி குருவி, காக்கை, பருந்து, கழுகு, முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல் உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து, இறந்து அப்பறவை யோனி வர்க்ககங்ளெல்லாம் சென்று, சென்று உழன்று, உழன்று அலுப்படைந்தோம். பின்னர் அணில், குரங்கு, நாய்,பன்றி, பூனை, ஆடு, மாடு யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிடியுண்டல் அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்விலங்கு யோனிவர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் பசாசர் யூதர், இராக்கதர், அசுரர் முதலியராகப் பிறந்து பிறந்து அலைப்படுதல் அகப்படுதல், அகங்கரித்தல் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல் திகைப்